முஸ்லிம் பள்ளியின் நிர்வாகி ஓரினச்சேர்க்கை புகாரில் கைது
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், கலைஞர் நகரை சேர்ந்தவர் சாதிக், 45. இவர், பா.முத்தம்பட்டியில் மதரசா அரபி பள்ளி நடத்தி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயக்கன்பட்டி கூலித்தொழிலாளியின், 7 மற்றும், 9 வயது மகன்கள் மற்றும் அவரது நண்பரின், 8 வயது மகன் என, 3 பேர் அப்பள்ளியில் அரபி மொழி கற்க, ஆறு மாதங்களுக்கு முன் சேர்க்கப்பட்டனர். நேற்று அவர்களை பார்க்க வந்த பெற்றோர், குழந்தைகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கை, கால் என உடலின் பல பகுதியில் ஆங்காங்கே பற்களால் கடித்த வடு இருந்தது. இதுகுறித்து, விசாரித்தபோது சாதிக், தங்களை அடித்து துன்புறுத்தியதாகவும், ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி, உடல் முழுதும், கடித்துக் குதறியதாகவும் கூறினர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் இரவு திருப்பத்துார் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.விசாரணையில், சாதிக் அனுமதியின்றி மதரசா எனப்படும் அரபி மொழி பள்ளி நடத்தி வந்ததும், சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.