உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சுவர் இடிப்பு: ஸ்டேஷனை முற்றுகையிட்ட விவசாயி

சுவர் இடிப்பு: ஸ்டேஷனை முற்றுகையிட்ட விவசாயி

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த முருக்கன்குட்டையை சேர்ந்தவர் பிரகாசம், 50; கூலி தொழிலாளி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசிக்கிறார்.இவரது நிலத்திற்கு பின்புறம், அப்பகுதி செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோர் நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. இவர்கள் நீண்ட காலமாக பிரகாசம் நிலம் வழியாக, வரப்பு பாதையை பயன்படுத்தினர். சில மாதங்களாக, கார் செல்லும் அளவிற்கு வழிவிடுமாறு கேட்க, பிரகாசம் மறுத்தார். ஆத்திரமடைந்த செல்வராஜ் உள்ளிட்ட நான்கு பேரும், நேற்று பிரகாசம் வீட்டின் சுற்றுச்சுவரை பொக்லைன் இயந்திரத்தால் இடித்தனர்.பிரகாசம் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், குடும்பத்தினருடன் ஸ்டேஷனை முற்றுகையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி