மேலும் செய்திகள்
பள்ளி மாணவி கடத்தல்? ஆம்பூர் அருகே பரபரப்பு
13-Dec-2025
கணவனை இழந்த பெண் வெட்டி கொலை
13-Dec-2025
லாரி மீது கார் மோதல் : மாமியார், மருமகன் பலி
02-Dec-2025
நாட்றம்பள்ளி: திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரை சேர்ந்தவர் பிரபாகரன், 33; பட்டதாரி. இவரது முகநுால் பக்கத்தில், டிச., 27ல் வந்த ஒரு தகவலில், பகுதிநேர வேலை உள்ளதாகவும், இதில், அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, ஒரு லிங்க் வந்துள்ளது.அதில், பிரபாகரன் விபரம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள், ஒரு வங்கி கணக்கை கொடுத்து, அதில் பணம் செலுத்தினால் கூடுதல் பணம் கிடைக்கும் என, கூறினர். பிரபாகரன், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார். அப்போது, வங்கி கணக்கில் பணம் கிடைத்துள்ளது. இதை நம்பிய அவர், தொடர்ந்து பல்வேறு தவணைகளில், 28.21 லட்சம் ரூபாய் செலுத்தினார்.ஆனால், அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரபாகரன் புகார் படி, திருப்பத்துார் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Dec-2025
13-Dec-2025
02-Dec-2025