உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / தி.மு.க., நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தி.மு.க., நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அரசம்பட்டி : திருப்பத்துார் மாவட்டம், அரசம்பட்டி, தி.மு.க., கிளை செயலர் ஆனந்தன், 45. இவரது அண்ணன் அனுமுத்து, 48. இவர்களது நண்பர் ஜெமினி கணேசன், 46, மூவரும் சேர்ந்து அப்பகுதியிலுள்ள, பொதுவழி பாதை மற்றும் அரசு இடத்தை ஆக்கிரமித்து சிமென்ட் குடோன் கட்டியுள்ளனர். சில நாட்களுக்கு முன் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.புகார் கொடுத்தவரில் ஒருவரான சிவக்குமார், 30, என்பவர் நேற்று, குடோன் கட்டியுள்ள பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை, தி.மு.க., கிளை செயலர் ஆனந்தன், இவரது அண்ணன் அனுமுத்து, இவரது மகன் கார்த்திகேயன் ஆகியோர் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். இதை கண்டித்து, அப்பகுதி மக்கள், திருப்பத்துார் - புதுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்துார் தாலுகா போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ