ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் தமிழருவி, 55, என்பவர், வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டில், ஸ்வீட் கடை நடத்துகிறார். 30ம் தேதி இரவு, 11:00 மணிக்கு மூன்று வாலிபர்கள் மாஸ்க் அணிந்து, பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். இதில், கடை நாசமானது. தீயை அணைக்க முயன்ற தொழிலாளி படுகாயமடைந்தார். வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரித்தனர்.சில நாட்களுக்கு முன், வாணியம்பாடி மில்லத் நகரை சேர்ந்த சதாம், 27, என்பவர், அந்த கடைக்கு சென்று ஸ்வீட் வாங்கி, கூடுதல் தள்ளுபடி தரும்படி கேட்டார். அதற்கு கடை ஊழியர்கள் மறுத்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின், 30ம் தேதி இரவு தன் நண்பர்கள், வாணியம்பாடி கோவிந்தாபுரத்தை சேர்ந்த நர்மதன், 21, மில்லத் நகரை சேர்ந்த முகமது வசீம், 24, ஆகியோருடன் சென்று, கடையில் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிந்தது.நர்மதன், முகமது வசீம் ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்து, தலைமறைவான சதாமை தேடுகின்றனர்.