உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரயில்வே இடத்தில் கட்சி கூட்டம் ஸ்டேஷன் மாஸ்டர் துாக்கியடிப்பு

ரயில்வே இடத்தில் கட்சி கூட்டம் ஸ்டேஷன் மாஸ்டர் துாக்கியடிப்பு

ஜோலார்பேட்டை:ரயில்வே இடத்தில், தி.மு.க., கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய ஸ்டேஷன் மாஸ்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு சொந்தமான இடத்தில், கடந்த, 8ம் தேதி, மத்திய பட்ஜெட் மற்றும் பா.ஜ., அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. வேலுார், தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த், கட்சி தலைமைக்கழக பேச்சாளர்கள் சைதை சாதிக் உள்ளிட்டோர், பா.ஜ.,வையும், மத்திய அரசையும் கண்டித்துப் பேசினர். தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்த இடம், ரயில்வே துறைக்கு சொந்தமானது. அதில், மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்த, ஜோலார்பேட்டை ரயில்வே உதவி கோட்டப் பொறியாளர், பணி ஆய்வாளர், ஸ்டேஷன் மாஸ்டர் ஆகியோர் மீது, திருப்பத்துார் மாவட்ட பா.ஜ., பொதுச்செயலர் கவியரசு, மத்திய ரயில்வே துறைக்கு புகார் மனு அனுப்பினார். அதன்படி, ஜோலார்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் சுந்தரமூர்த்தியை, ஆந்திர மாநிலத்திற்கு இடமாற்றம் செய்து, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை