உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / டெய்லருக்கு 22 ஆண்டு சிறை

டெய்லருக்கு 22 ஆண்டு சிறை

திருப்பத்துார்: திருப்பத்துார், காந்தி நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 31; டெய்லர். இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். உறவினரின் மகளான, 16 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்தார். சிறுமி கர்ப்பமானார். 2021 ஜூன் 28ல், திருப்பத்துார் போலீசார், போக்சோவில் மஞ்சுநாதனை கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி மீனாகுமாரி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். பலாத்காரம் செய்த மஞ்சுநாதனுக்கு, 20 ஆண்டு சிறை, கடத்தியதற்காக, 2 ஆண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை