| ADDED : ஜன 13, 2024 11:34 AM
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே, பெண் போலீஸ்காரர் வீட்டில் ஐந்து பவுன் நகை, பிரிட்ஜ், வாஷிங்மிஷின், 'டிவி' ஆகியவை திருடப்பட்டுள்ளது.திருப்பத்துார் மாவட்டம், பெரிய கண்ணியம்பட்டி அடுத்த ஜடையன் வட்டத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன், 30. டெல்லியல் பாதுகாப்பு படை போலீசாக பணிபுரிந்து வருபவர் இவரது மனைவி சத்தியவாணி, 27. இருவரும் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருவதால், அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரனின் தம்பி ரவி, இவர்களது வீட்டை கவனித்து வருகிறார்.இந்நிலையில், பிரபாகரனின் வீட்டில் இரவு போட்டுவிட்டு வந்த மின் விளக்குகளை அணைக்க ரவி நேற்று காலை சென்றுள்ளார். அப்போது, வீட்டின் மெயின் கேட் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார்.தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை, வீட்டில் இருந்த 'டிவி', பிரிட்ஜ், வாஷிங்மிஷின் ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.