உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை சரிவு

நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை சரிவு

திருப்பூர் : அரசு மீன் வளர்ச்சி கழக நெய்தல் அங்காடியில், கடந்த மாதத்தைவிட மீன் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது. ஆழியாறு, அமராவதி, திருமூர்த்தி, பாலாறு அணை பகுதிகளில் இருந்து திருப்பூரில் உள்ள அரசு மீன் வளர்ச்சி கழக நெய்தல் அங்காடிக்கு விற்பனைக்கு மீன் கொண்டு வரப்படுகிறது. கட்லா, ரோகு, மிர்கால், வாளை, கெளுத்தி, பெரிய சிலேபியா, சிறிய சிலேபியா, இறால், வஞ்சிரம், அயிலை உள்ளிட்ட பலதரப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாதம் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு முதல் மூன்று டன் வரை மீன் வர்த்தகம் நடந்தது. ஆடி மாதம் பிறக்க உள்ளதையடுத்து பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால், மீன் வளர்ச்சி கழகத்தில் விற்பனை குறைந்துள்ளது.மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் மீன் சீசன் முடிந்துள்ளது. கேரள மீன் வரத்தை எதிர்நோக்கி உள்ளோம். மீன் வரத்து குறைந்ததால், ரகத்துக்கு ரூ.50 முதல் 100 வரை விலை ஏற்றம் அடைந்துள்ளது. ஆடி முதல் மார்கழி வரை ஆறு மாதமும் சுபதினங்கள் நிறைந்தவை. பெரும்பாலானோர் ஒரு மாதமாக இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை தவிர்த்து விட்டனர். இதனால், மீன் அங்காடியில் கடந்த மாதம் வரை மூன்று டன்னாக இருந்த மீன் விற்பனை, தற்போது ஒரு டன்னாக குறைந்துள்ளது. மார்கழி மாதம் வரை விற்பனை மந்தமாகவே இருக்கும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி