உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேட்புமனு தாக்கல் இரண்டாவது நாளிலும் யாருமே வரலீங்க!

வேட்புமனு தாக்கல் இரண்டாவது நாளிலும் யாருமே வரலீங்க!

திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதியில், இரண்டாவது நாளான நேற்றும் வேட்பாளர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.தமிழகத்தில், லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், நேற்றுமுன்தினம் முதல் துவங்கியுள்ளது. திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய, கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்கலெக்டர் அலுவலகங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில், கலெக்டர் அறை அருகே, வேட்பாளர்களுக்கு வேட்புமனு படிவம் வழங்கவும்; வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய பிரத்யேக பிரிவு செயல்பட்டுவருகிறது. இரண்டாவது நாளான நேற்றும், கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகங்களில் யரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.அதேநேரம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பத்துக்கும் மேற்பட்டோர், வேட்புமனு படிவங்களை மட்டும் வாங்கிச்சென்றனர். சப்-கலெக்டர் அலுவலகத்தில், வேட்புமனு வாங்குவதற்கு கூட யாரும் வரவில்லை.திருப்பூர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்களை, தி.மு.க., கூட்டணி, நாம்தமிழர் கட்சிகள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டன. அ.தி.மு.க., வை பொறுத்தவரை நேற்றுதான் திருப்பூருக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. பா.ஜ., சார்பில், இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதனால், பெரும்பாலான வேட்பாளர்கள், வரும், 25ம் தேதி துவங்கி, 27ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை