உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரே இடத்தில் 3 கண்காட்சி

ஒரே இடத்தில் 3 கண்காட்சி

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு, புதிதாக கண்டறியப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு வந்து சேர்ப்பதில், கண்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா சார்பில், 32 வது 'யார்னெக்ஸ்' கண்காட்சி; 18வது 'டெக்ஸ் இந்தியா' கண்காட்சி; 5வது 'டைகெம்' கண்காட்சி, திருப்பூரில் ஒரே இடத்தில் நடக்கிறது.

'யார்னெக்ஸ்'

கண்காட்சிகள், நாளை (12ம் தேதி) துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்கிறது. பருத்தி மற்றும் செயற்கை நுாலிழைகள்; புதுகை ஆடை உற்பத்திக்கான துணி ரகங்கள்; சாய ஆலைகள் மற்றும் பிரின்டிங் துறையினருக்கு பயன்படுத்தும், சாயம் மற்றும் கெமிக்கல் போன்றவை கண்காட்சியில் இடம்பெறுகின்றன.கண்காட்சியில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த, நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பருத்தி, கம்பளி, பட்டு, பிளாக்ஸ் / ராமி ரக இயற்கை 'பைபர்'கள்; மறுசுழற்சி மற்றும் 'பிளண்டட்', எலாஸ்டிக், பேன்சி மற்றும் ஸ்பெஷாலிட்டி செயற்கை நுாலிழைகளுக்கான, 'பைபர்'கள் இடம்பெறகின்றன.

'டெக்ஸ் இந்தியா'

துணி ரகங்களில், 'நிட்டட்', எம்ப்ராய்டரி, கிரே, இறக்குமதி செய்யப்பட்ட டெனிம் மற்றும் பாட்டம்' வெயிட் துணிகள், பிரின்ட் செய்த துணிகள், சாயமிடப்பட்ட துணிகள், பட்டுத்துணி, ஸ்பெஷாலிட்டி துணிகள், வெல்வெட், வுல்லன், மில் துணி மற்றும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட 'சர்ட்டிங்' ரகங்கள்; 'டிரிம்ஸ்', எம்பலிஷ்மென்ட், பட்டன், ேஹங்கர், ஜிப்பர்கள், இண்டர் லைனிங், லேபிள் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறுகின்றன.

'டைகெம்'

திருப்பூரில், 3வது முறையாக நடக்கும், 'டைகெம்' கண்காட்சியில், புதிய வகை சாயம், 'பிக்மெண்ட்', உப பொருட்கள், 'ரியாக்டிவ்', 'சல்பர்', ஆசிட், அல்கலைன் முதலான அனைத்து ஜவுளி சாயம். பிரின்டிங் பேஸ்ட் மற்றும் இங்க் வகைகள், கெமிக்கல் ரகங்கள் இடம் பெறுகின்றன.அகமதாபாத், பகாதுர்கர், பெங்களூரு, பில்வாரா, போபால், பெட்டாட், சண்டிகர், சென்னை, கொச்சின், கோவை, திண்டுக்கல், ஈரோடு, பரிதாபாத், கிரிதி, குருகிராம், ஹிந்துபூர், ைஹதராபாத், ஜெய்பூர், கரூர், கோலாபூர், கொல்கத்தா, குமாரபாளையம், லுாதியானா, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும், ஆஸ்திரியா, சீனா, எகிப்து, ஹாங்காங், அமெரிக்க நாடுகளில் இருந்தும், நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை