திருப்பூர்;பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், ஆங்கிலத்தை விட தமிழில் அதிக சென்டத்தை மாவட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்; கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் அதிகபட்சமாக, 654 பேர் சென்டம் வாங்கியுள்ளனர்.கடந்த, 2023ல் தமிழில் ஒருவர் கூட சென்டம் வாங்கவில்லை. இம்முறை மூன்று பேர் சென்டம் பெற்றுள்ளனர். கடந்த முறை ஆங்கிலத்தில் ஒருவர் மட்டுமே சென்டம் பெற்றார்; இம்முறை இரண்டு பேர் நுாற்றுக்கு நுாறு வாங்கியுள்ளனர்.கடந்த முறை, புள்ளியியலில் இருவர் மட்டும் சென்டம்; இம்முறை நான்கு பேர். இயற்பியல், 43 பேர் சென்டம், 2023ல் பெற்றனர்; இம்முறை, 27 பேர் மட்டுமே. கடந்த முறை, பொருளியலில், 124 பேர் சென்டம் பெற்றிருந்தனர். இம்முறை, 189 பேர் கூடுதலாக சென்டம் பெற்றதால், பொருளியலில் சென்டம், 313 ஆக உயர்ந்துள்ளது.கடந்த, 2023ல் வேதியியல் பாடத்தில், 157 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். இம்முறை, 134 குறைந்து, சென்டம் எண்ணிக்கை, 23 ஆகியுள்ளது. மாணவர்களுக்கு நடப்பாண்டு கணிதம் தேர்வு எளிமையாக இருந்ததால், கடந்தண்டை காட்டிலும், 127 பேர் அதிகரித்து, 157 பேர் சென்டம் பெற்றுள்ளனர். வணிகவியலே 'டாப்'
வணிகவியல், 235 ஆக இருந்த சென்டம் எண்ணிக்கை, 591 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் கணக்கு பதிவியலில் சென்டம் எண்ணிக்கை கடந்தமுறையை விட, 330 குறைந்து, 203 ஆகியுள்ளது. அடிப்படை மெக்கானிக் படிப்பில், 67 ஆக இருந்த சென்டம், இரண்டாக குறைந்துள்ளது. உயிரியல், 20 ஆக இருந்த சென்டம், ஆறாகவும், அடிப்படை எலக்ட்ரிக்கல் பாடத்தில், 17 ஆக இருந்து சென்டம், நான்காகவும் குறைந்து விட்டது.வணிக கணிதத்தில், கடந்த முறை, 81 சென்டம்; இம்முறை, 25 சென்டம் மட்டுமே. கடந்த முறை உயிரியலில், 20 பேர் நுாற்றுக்கு நுாறு வாங்கியுள்ளனர். இம்முறை ஒருவர் மட்டுமே வாங்கியுள்ளனர். கடந்த முறை தாவரவியல் பாடத்தில் இருவர் சென்டம் பெற்றனர்; இம்முறை சென்டம் பெறவில்லை. கடந்த முறை ஒருவர் மட்டும் சென்டம் பெற்ற கம்ப்யூட்டர் டெக்னாலஜி, டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி, ேஹாம் சயின்ஸ், புவியியல் பாடங்களில் இம்முறை சென்டம் இல்லை.ஆனால், கடந்த முறை, 276 ஆக இருந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் சென்டம் எண்ணிக்கை, இம்முறை, 378 உயர்ந்து, 654 ஆகியுள்ளது. இம்முறை, 340 பேர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸில் சென்டம் வாங்கியுள்ளனர்; கடந்த முறை இது, 364 ஆக இருந்தது.