உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடம் சட்டசபை தொகுதியில் 6 ஆயிரம் புதிய வாக்காளர்கள்

பல்லடம் சட்டசபை தொகுதியில் 6 ஆயிரம் புதிய வாக்காளர்கள்

பல்லடம்;பல்லடம் சட்டசபை தொகுதியில் உள்ள, 6 ஆயிரம் புதிய வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோவை லோக்சபா தொகுதியின் கீழ், பல்லடம் சட்டசபை தொகுதி அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டசபை தொகுதி, கோவை லோக்சபா தொகுதியின், 2வது பெரிய சட்டசபை தொகுதியாக உள்ளது.பல்லடம் சட்டசபை தொகுதியில், 1,93,579 ஆண்கள், 1,99,126 பெண்கள் மற்றும் 61 மூன்றாம் பாலினத்தினர் என, மொத்தம், 3,92,766 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை வைத்துள்ளனர். தேர்தல் கூட்டணியை பொறுத்து இந்த வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தல்களிலும் மாறும்.இதற்கிடையே, புதிய வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல்லடம் சட்டசபை தொகுதியில், 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டு, 3,245 ஆண்கள், 2,954 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தினர், 2 என, மொத்தம், 6,201 புதிய வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த கால தேர்தல்களை பொறுத்தவரை, பல்லடம் தொகுதி அ.தி.மு.க. கோட்டையாகவே இருந்துள்ளது. தற்போது, உள்ளாட்சிகள் தி.மு.க., வசமும், சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வசமும் உள்ளது. தேர்தல் களப்பணியை பொறுத்தவரை, பல்லடம் தொகுதியில் யாரும் பெரிய அளவு அக்கறை காட்டவில்லை என்றே தோன்றுகிறது.இருப்பினும், ஒவ்வொரு கட்சிகளுக்கும் உள்ள சராசரி ஓட்டுகளை தவிர்த்து, புதிய மற்றும் நடுத்தர வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன. இவ்வகையில், புதிய வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு பல்லடத்தில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை