உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓடும் காரில் தீ விபத்து

ஓடும் காரில் தீ விபத்து

அவிநாசி:கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த மார்ட்டின் பிலோமின்ராஜ் 48. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேலத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் கேரளா நோக்கி, நேற்று காலை காரில் திரும்பி கொண்டிருந்தார்.அவிநாசி, பழங்கரை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரில் முன் பக்கத்தில் இருந்து புகை வந்ததை கவனித்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அனைவரும் இறங்கி தப்பினர். தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற அவிநாசி தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி