உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விரல் நுனியில் உங்கள் ஊராட்சி விவரங்கள் உதவுகிறது மொபைல் செயலி

விரல் நுனியில் உங்கள் ஊராட்சி விவரங்கள் உதவுகிறது மொபைல் செயலி

திருப்பூர்;மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் செயல்படுத்திவரும் ' Meri Panchayat' (என் ஊராட்சி) மொபைல் செயலி, ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது.ஊராட்சி சார்ந்த அனைத்து அம்சங்களையும் வெளிப்படையாக மக்கள் அறிந்துகொள்ள இந்த செயலி கைகொடுக்கிறது.மொபைல் பிளேஸ்டோர் அல்லது ஆப்ஸ்டோரிலிருந்து செயலியை நிறுவிக்கொள்ளலாம். பெயர், மொபைல் எண், இ-மெயில், இருப்பிட விவரங்களை அளித்து, ஒருமுறை மட்டும் பதிவு செய்தால் போதும்.செயலியில், மாநிலம், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஆகியவற்றை தேர்வு செய்து, குறிப்பிட்ட ஊராட்சி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.ஊராட்சி தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், செயலர் ஆகியோரின் பெயர், புகைப்படம், மொபைல் எண், இ-மெயில் முகவரி;ஊராட்சியின் பரப்பளவு, மக்கள் தொகை, அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார மையம், விளையாட்டு மைதானம், குடிநீர் ஆதாரங்களின் எண்ணிக்கை; ஊராட்சி நிர்வாகத்தின், அசையும், அசையா சொத்துகள்; ஒவ்வொரு ஆண்டும் மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பெறப்பட்ட நிதி.எந்தெந்த திட்டத்தில், எவ்வளவு தொகை மதிப்பீட்டில், சாலை, குடிநீர் உள்பட என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்றுவரும் பணிகளின் நிலை போன்றவை குறித்து அறியலாம்.

அனைத்து அம்சங்களும்...

ஊராட்சியின் வரவு - செலவு, வங்கி கணக்கில் உள்ள தொகை மற்றும் தேதி வாரியாக வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்பட்ட தொகை; ஊழியர் சம்பளம் உள்பட டெபிட் செய்யப்பட்ட தொகை; ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கைகள்; தணிக்கை செய்த அதிகாரிகள் யார்; டெண்டர் என, இந்த ஒரே செயலி மூலம், ஊராட்சி குறித்த அனைத்து அம்சங்களும் எப்போதும் உங்கள் விரல் நுனியில் இருக்கும்.மோசமான சாலைகள், எரியாத தெருவிளக்கு, குடிநீர் வரவில்லை, பொது கழிப்பிடம், கட்டுமான பணிகளில் தரம், சுகாதாரம், இறந்த விலங்குகள் குறித்த புகார்களை, போட்டோவுடன் புகார் அளிப்பது; புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது.உங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகள் குறித்த ஆலோசனைகளையும் பதிவு செய்யலாம்.எந்த ஊராட்சி குறித்தும் அறியலாம்மாநிலம், மாவட்டம், ஒன்றியம், ஊராட்சியை மாற்றம் செய்து, நாட்டின் எந்த ஒரு ஊராட்சி குறித்தும், இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளமுடியும். நாடுமுழுவதும் உள்ள 2 லட்சத்து 56 ஆயிரத்து 996 ஊராட்சிகளின் விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளின் விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை