உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொத்து வரி வசூல் பணிக்கு பாய்ன்ட் ஆப் சேல் கருவி

சொத்து வரி வசூல் பணிக்கு பாய்ன்ட் ஆப் சேல் கருவி

திருப்பூர்:-மாநகராட்சி பகுதியில் சொத்து வரியினங்கள் வசூலிக்கும் பணிக்கு 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், ஏறத்தாழ 3 லட்சம் வரி விதிப்புகள் உள்ளன. இது தவிர, தொழில் வரி, குடிநீர் கட்டணம், உரிமக்கட்டணம், காலியிட வரி, பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வரியினங்கள் வசூலிக்கப்படுகிறது.வரி வசூல் பணி, மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர ஆன்லைன் வாயிலாகவும் சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரியினங்களைச் செலுத்தும் வகையிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நான்கு மண்டலங்களிலும மொபைல் வரி வசூல் மையங்களும் செயல்படுகிறது.வருவாய் பிரிவு ஊழியர்கள் தங்கள் வார்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று நேரடியாக வரியினங்களை வசூலிக்க வசதியாக, 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோர் நேரடியாக வங்கி அட்டைகள் பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி அதற்கான ரசீதைப் பெற வழி செய்யப்பட்டுள்ளது. புதிய நடைமுறையை, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், 35வது வார்டு, கே.பி.என்., காலனி பகுதியில் வரி வசூல் செய்து துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

5 சதவீத ஊக்கத்தொகை

நகராட்சி விதிகளின்படி அரையாண்டுக்கான வரியினங்களை அரையாண்டு துவங்கிய முதல் 30 நாளுக்குள் செலுத்தும் போது 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் அறிமுகப்படுத்தியதை ஏராளமான வரி செலுத்துவோர் பயன்படுத்தி பலன் பெற்றுள்ளனர். நடப்பு 2024 -25 நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான வரியினங்களை அக். 31 ம் தேதிக்கு முன்னதாக செலுத்தி, இந்த 5 சதவீத ஊக்கத் தொகையை சொத்து உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். - பவன்குமார்,மாநகராட்சி கமிஷனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை