உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலின் நிலையை விளக்கும் குறும்படம்; விசைத்தறி கூட்டமைப்பு தீர்மானம்

தொழிலின் நிலையை விளக்கும் குறும்படம்; விசைத்தறி கூட்டமைப்பு தீர்மானம்

பல்லடம் : தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு ஆலோசனைக் கூட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார்.தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு துறைகளுக்கு தேவைப்படும் சீருடை, இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை விசைத்தறிகள் மூலமாக மட்டுமே தயாரித்து வழங்கிட அரசை அணுகி தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். சோலார் மின்சாரம் பெரிய அளவில் உற்பத்தி செய்து விசைத்தறிகளுக்கு வழங்க வேண்டும். தொழிலின் தற்போதைய நிலை குறித்து குறும்படம் ஒன்றை தயாரித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதை அனுப்பி வைத்து, எந்த அளவு தொழிலில் பாதிப்புகள் உள்ளது என்பதை விளக்க வேண்டும். மத்திய அரசின் 'பவர் டெக்ஸ் இந்தியா' திட்டத்தை உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். விசைத்தறிகளுக்கு என, தனியாக ஒதுக்கீடு வழங்குவதுடன், தறிகளை நவீனப்படுத்துவதற்காக, மத்திய அரசு, 50 சதவீதமும், மாநில அரசு, 50 சதவீதமும் மானியம் வழங்க வேண்டும். மொத்தத்தில், அழிவுப் பாதையில் இருந்து தொழிலை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டமைப்பு சார்பில், மாநில, மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிர மணியம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி