உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தை சடலத்தை கவ்விச்சென்ற தெருநாயால் திருப்பூரில் பரபரப்பு

குழந்தை சடலத்தை கவ்விச்சென்ற தெருநாயால் திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிச்சிபாளையம், திரு.வி.க., நகரில் உள்ள மயானத்தில் இரு நாட்களாக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொக்லைன் வாகனம் வாயிலாக அங்குள்ள புதர்களை அகற்றி, மயானம் சீரமைப்பு செய்யும் பணி நடந்தது.நேற்று அதிகாலை மயானத்திலிருந்து அழுகிய நிலையில் குழந்தை சடலம் ஒன்றை தெரு நாய் ஒன்று கவ்வியபடி சென்றது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நாயை விரட்டியதில் சடலத்தை விட்டு ஓடியது.தகவலறிந்து தெற்கு போலீசார், அழுகிய நிலையில், பாதியளவு மட்டுமே இருந்த குழந்தை சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.மயானத்தில் சீரமைப்பு பணி நடந்தபோது, ஆழம் குறைவான இடத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை நாய் தோண்டி எடுத்து வந்தது தெரியவந்தது. சடலம் முழுமையாக இல்லாத நிலையில், ஆணா, பெண்ணா, புதைக்கப்பட்டது எப்போது என எந்த விவரமும் தெரியவில்லை. பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை