| ADDED : ஜூலை 18, 2024 12:00 AM
திருப்பூர் : மங்கலம் ரோடு, கோழிப்பண்ணை அருகே, ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மங்கலம் ரோட்டில், மாநகராட்சி எல்லையில் இருப்பது கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப். கடைகள், குடியிருப்புகள் என, கலகலப்பாக இருக்கும் அப்பகுதியில், போக்குவரத்தும் அதிகம். இந்நிலையில், ரோட்டின் தென்புறத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென பள்ளம் ஏற்பட்டது.ரோட்டில் இருந்து ஒரு அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, இரும்பு 'பேரிகார்டு'களை கொண்டு சுற்றிலும் தடுத்து வைத்துள்ளனர். பாதாள சாக்கடை குழாய், ரோட்டின் மையத்தில் செல்கிறது. அதிகமாக குடிநீர் குழாய்கள் ரோட்டின் இருபுறமும் செல்கின்றன.இந்நிலையில், ரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், அப்பகுதியில் அச்சம் பரவியுள்ளது; போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து, உடனடியாக குழியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.