உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தண்டவாளத்தில் விரிசல் நடுவழியில் நின்ற ரயில் 

தண்டவாளத்தில் விரிசல் நடுவழியில் நின்ற ரயில் 

திருப்பூர் : சென்னை, எழும்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11:15 மணிக்கு புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை, 8:00 மணிக்கு ஈரோடு வந்தது. ஊத்துக்குளி கடந்து திருப்பூர் நோக்கி ரயில் வந்த நிலையில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு கி.மீ., முன் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நின்றது.திருப்பூர் மெயின் லைன் - கூட்ஸ்ஷெட் டிராக் இடையே தண்டவாளத்தில் லேசான விரிசல் ஏற்பட்டதால், சிக்னல் தானியங்கி முறையில், சிவப்பு விளக்குக்கு மாறியது.இத்தகவல் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிய, உடனடியாக பொறியியல் குழுவினர் அவ்விடத்துக்கு விரைந்தனர்.முதல் ரயில்வே கேட் முன் விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாளத்துக்கு கீழ், கட்டையை வைத்து, ஜல்லிக்கற்களை நிரப்பி, தற்காலிகமாக சீர் செய்து, ரயிலுக்கு சிக்னல் வழங்கப்பட்டு, ரயில் சென்றது. இதனால் 50 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ