உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட மாநில தொழிலாளருக்கு உதவ ஒருங்கிணைந்த மையம் தேவை

வட மாநில தொழிலாளருக்கு உதவ ஒருங்கிணைந்த மையம் தேவை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பீஹார், ஒடிசா போன்ற மாநிலங்கள் அங்கேயே, தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பயிற்சி நிறைவு பெறும் தொழிலாளர்கள், அம்மாநில அரசு வழிகாட்டுதலுடன், திருப்பூர் போன்ற பிறமாநில தொழில் நகரங்களுக்கு செல்கின்றனர். அதற்கு பிறகும், வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு தொழிலாளர் பணிபுரியும் விவரத்தை, வடமாநில அரசுகளும் கண்காணிக்கின்றன. இருப்பினும், திருப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் போது, தொழிலாளர்களுடன் சிலர் எவ்வித பயிற்சியும் இல்லாமல், தன்னிச்சையாக பணிக்கு வருகின்றனர்.ஒடிசா மாநில உதவி மைய முன்னாள் பொறுப்பாளர் ராமசாமி கூறியதாவது:அரசு பயிற்சி மையங்களில், முறையாக பயிற்சி பெற்று வருவோர், பாதுகாப்பாக பணியாற்றலாம். தன்னிச்சையாக வருவோர், கூட்டமாக இருந்தால் பிரச்னை இல்லை; தனியே இருந்தால், உரிய பாதுகாப்பு கிடைக்காது. அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர் நலனுக்காக உதவி மையங்களும் உள்ளன.இங்கிருந்து, சம்பந்தப்பட்ட மாநிலத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கு நேரடியாக தகவல் அளிப்போம். தன்னிச்சையாக வரும் தொழிலாளர்கள், உதவி மையத்தை நாடினால் தேவையான உதவி பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.வடமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ஒருங்கிணைந்த உதவி மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஒடிசாவைச் சேர்ந்தவர் ரமேஷ் மெகந்தி, 18. கடந்த மாதம் திருப்பூருக்கு வேலை தேடி வந்தார். சுல்தான்பேட்டையில் உள்ள நிறுவனத்தில் செக்கிங் பணிக்குச் சேர்ந்து, தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார்.கடந்த, 20ம் தேதி தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தார் இந்திய கம்யூ., மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர்.உடனே, வாலிபரின் குடும்பத்தாரை திருப்பூருக்கு வரவழைத்து, போலீஸ் நடவடிக்கை மற்றும் இறுதிச் சடங்கு ஆகியவற்றுக்கு சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். மனிதாபிமான அடிப்படையில் இதற்கான செலவுகளையும், குடும்பத்தாருக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் ரமேஷ் மெகந்தி வேலை செய்த நிறுவனத்திடம் பெற்றுத் தரப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகளின் இந்த நடவடிக்கை, தொழிலாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை