உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

அனுப்பர்பாளையம்;திருப்பூர், ஏழு மற்றும் எட்டாவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி மா.கம்யூ., கட்சி சார்பில், பொதுமக்கள் நேற்று காலை இரண்டாம் மண்டல அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் ரமேஷ், தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் காளியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் சிகாமணி, ஆகியோர் பேசினர்.மண்டல தலைவர் கோவிந்தராஜை சந்தித்து அளித்த மனு:குருவாயூரப்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் முன் வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. அங்குள்ள ஆறு வீதிகளில் மின் விளக்கு சரியாக எரிவதில்லை. ஐயப்பா நகரில் கழிவுநீர் தேங்கி உள்ளது. போயம் பாளையத்தில் உள்ள கான்கிரீட் சாலை தோண்டி ஒன்றரை ஆண்டாக மூடாமல் உள்ளது. கங்கா நகர் முதல் வெங்கமேடு வரையிலான ரோட்டை சீரமைக்க வேண்டும்.புதிய தெரு விளக்கு அமைக்க வேண்டும். குடிநீர் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டும். பழனிச்சாமி நகர் மூன்றாவது வீதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கோழிக்கடையை அகற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற தலைவர், உதவி பொறியாளரை அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்.துப்புரவு பணியாளர்களை அழைத்து சுகாதார பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை