உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை அமைக்க ரூ.7 லட்சம் ஒதுக்கீடு

சாலை அமைக்க ரூ.7 லட்சம் ஒதுக்கீடு

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, ஏழாவது வார்டு போயம் பாளையம் எஸ்.வி., அவன்யூ பகுதியில் ரோடு வசதி இல்லை.ரோடு வசதிகோரி அப்பகுதி மக்கள் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமாரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனையொட்டி, அவர் கான்கிரீட் சாலை அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஏழு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தார். சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. அதில் எம்.எல்.ஏ., விஜயகுமார், கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.இரண்டாவது மண்டல தலைவர்கோவிந்தராஜ், வார்டு கவுன்சிலர் கவிதா, கூட்டுறவு சொசைட்டி தலைவர் நீதிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை