திருப்பூர்;கோவையில் இருந்து சென்னை செல்லும் தினசரி மற்றும் வாராந்திர ரயில் (புதன்), பெங்களூரு ரயில் என மூன்று வந்தே பாரத் ரயில்கள், தற்போது, திருப்பூர் ஸ்டேஷனில் நின்று செல்கிறது. தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம், எர்ணாகுளம் - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் (எண்: 06001) அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த ரயில் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கவுள்ளது.மதியம், 12:50க்கு எர்ணாகுளத்தில் புறப்படும் ரயில், மாலை, 4:58க்கு திருப்பூர் ஸ்டேஷனுக்கு வரும். மறுமார்க்கமாக வியாழன், சனி, திங்கள் கிழமை பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்துக்கு ரயில் (எண்:06002) இயக்கப்படும். காலை, 7:30க்கு புறப்படும், திருப்பூருக்கு, காலை 10:33க்கு வரும்; மதியம், 2:20க்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் போத்தனுார் கடந்து, திருப்பூரில் நின்று, ஈரோடு சென்றடையும்; கோவை ஜங்ஷன் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வந்தே பாரத் ரயில் அறிவிப்பால், திருப்பூரில் நின்று செல்லும் வந்தே பாரத் ரயில் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.'புதிய வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்படும். வரும், 31ம் தேதி எர்ணாகுளத்தில் பயணத்தை துவங்கும் ரயில், ஆக., 25 வரையும், பெங்களூரில் ஆக., 1 ம் தேதி பயணத்தை துவங்கும் ரயில், ஆக., 26 ம் தேதி வரையும் பரீட்சார்த்த முறையில் இயங்கும். பயணிகள் எண்ணிக்கை, முன்பதிக்கு ஏற்ப ரயில் நீட்டிப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்,' என, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.