உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி: விரைவில் என்கிறார் கலெக்டர்

ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி: விரைவில் என்கிறார் கலெக்டர்

திருப்பூர்:ஆண்டிபாளையம் குளம் படகு இல்லம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலா துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 1.47 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிவடைந்து, சவாரி செல்வதற்காக படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.இம்மாத இறுதிக்குள் படகு இல்லத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆண்டி பாளையம் குளத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணிகள், 99 சதவீதம் முடிவடைந்துவிட்டன.படகு சவாரி, நீர் விளையாட்டுக்கள், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா, உணவகம், சிற்றுண்டி கடை, டிக்கெட் வழங்கும் இடம், குடிநீர் வசதி, மின்விளக்கு, கழிப்பிடம், பார்க்கிங் உள்ளிட்ட அம்சங்களுடன் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.திருப்பூர் மக்களுக்கு ஆண்டிபாளையம் குளம் சிறந்த பொழுது போக்கு அம்சமாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி