| ADDED : மே 26, 2024 11:13 PM
உடுமலை;மக்காச்சோளம், உளுந்து சாகுபடிக்கு தேவையான விதைகள் குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா அறிக்கை: குடிமங்கலம் வட்டாரத்தில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி, மக்காச்சோளம், சோளம், உளுந்து, பாசிப்பயறு, தட்டை பயறு விதைப்பு செய்யலாம்.இச்சாகுபடிக்கு தேவையான விதைகளும், நுண்ணுாட்ட உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ்பாக்டீரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகள், தங்களது சிட்டா, ஆதார் அடையாள அட்டை நகலுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாம்.மேலும், தென்னை மரத்துக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், தென்னை விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.