உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆவின் - பால் நிறுவனங்கள் கூட்டுச்சதி

ஆவின் - பால் நிறுவனங்கள் கூட்டுச்சதி

பல்லடம் : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:தனியார் பால் விலை, லிட்டர் 10 ரூபாய் வரை குறைத்து விட்டனர். திடீரென மேற்கொள்ளப் பட்ட தனியார் பால் விலை குறைப்பு நட வடிக்கையால், கால்நடைகளை வைத்து பராமரிக்க முடியாத சூழல் ஏற் பட்டுள்ளது.தனியார் பால் விலை குறைப்பு மீது, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு தங்களுக்கு தொடர்பே இல்லை என்பது போல் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் உரிய விலை கிடைக்காததால், பெரும்பாலான விவசாயிகள் தனியார் பாலுக்கு தாவினர்.திடீரென, தனியார் பால் நிறுவனங்கள் விலை குறைப்பது, ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கூட்டுச்சதி செய்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.தமிழக அரசு தலையிட்டு, தனியார் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி