மேலும் செய்திகள்
தனியார் ஆம்புலன்ஸ் மோதி கணவன் கண்முன் மனைவி பலி
06-Aug-2024
பல்லடம்;பல்லடம், காரணம்பேட்டை பருவாய் செல்லும் ரோட்டில், வணிக வளாகம் ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர பேட்டரி வாகனத்தில் இருந்து, திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் வாகனம் தீப்பற்றி கொழுந்து விட்டு எறிய துவங்கியது.வாகனம் தீப்பற்றி எரிவதைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரித்து ஓடினர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், வானத்தின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் உதவியாளர், தீயணைக்கும் கருவியை பயன்படுத்தி வாகனத்தின் தீயை அணைத்தனர்.இதனால், வாகனத்தில் இருந்து கட்டடத்தின் உயரத்துக்கு வெண்புகை கிளம்பி வெளியேறியது. பொதுமக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸில் வந்தவர்கள் துரித கதியில் செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வாகனம் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து, பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
06-Aug-2024