உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐயப்பன் கோவில் கும்பாபிேஷகம் சரணகோஷம் முழங்க கோலாகலம்

ஐயப்பன் கோவில் கும்பாபிேஷகம் சரணகோஷம் முழங்க கோலாகலம்

பல்லடம்:பல்லடம் சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி அன்று துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடந்தது. 8:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டது. கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், அருள்மலை தோரணவாவி குமார சிவஞான சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்களின் முழக்கம், விண்ணதிர வைத்தது.''தொடர்ந்து, 12 ஆண்டுகள் அனுதினமும் ஆலயத்துக்குச் சென்று இறை வழிபாடு செய்தால் என்ன ஒரு புண்ணியம் கிடைக்குமோ, அதை ஒரு கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும். நமது மனிதப் பிறவியில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு கும்பாபிஷேகத்திலாவது பங்கேற்க வேண்டும். பிரம்ம பாதம், விஷ்ணு பாதம், ருத்ர பாதம், மகேஸ்வர பாதம், சதாசிவ பாதம் எனும் ஐந்து இருப்பதுதான் விமான கோபுர கலசம். இதற்கு பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றும் போது, மன அமைதியுடன் இருந்து இறைவனை வழிபட வேண்டும்'' என, கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் பேசினார். சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயப்ப பக்தர்கள் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.----பல்லடம், சந்தைப்பேட்டையில் உள்ள ஐயப்பன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டது.கும்பாபிேஷகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ