திருப்பூர் : சி.பி.எஸ்.இ., 12 வகுப்பு பொது தேர்வில், பெம் ஸ்கூல் ஆப் எக்சலென்ஸ் பள்ளி சாதனை படைத்துள்ளது.இப்பள்ளி மாணவி ஹர்சிதா, 500க்கு 492 மதிப்பெண் பெற்று, திருப்பூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். தேர்வெழுதிய, 53 பேரில், 14 பேர், 450 மதிப்பெண்ணுக்கு மேலும், 13 பேர், 400 மதிப்பெண்ணுக்கு மேலும் பெற்றனர்.பத்தாம் வகுப்பில், மாணவி ஐஸ்வர்யா, 500க்கு 488 மதிப்பெண் பெற்றார். தேர்வெழுதிய 82 மாணவ, மாணவியரில், 18 பேர், 450 மதிப்பெண்ணுக்கு மேலும், 24 பேர், 400 மதிப்பெண்ணுக்கு மேலும் பெற்றனர். மாணவர்கள் காதர்பீ, அபீலா, ஐஸ்வர்யா, ஸ்நேகா, ஸ்ரீ வர்ஷினி, மவுலீஸ், வருநிகா மற்றும் ஜூனைடா பிரைசி ஆகியோர், தனிப்பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர்.10 மற்றும், 12ம் வகுப்பு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத்தர காரணமாக இருந்த மாணவர்கள், தயார்படுத்திய ஆசிரியர்களை பள்ளி தாளாளர் விஷ்ணு பழனிசாமி, இணை செயலாளர் சரண்யா, பள்ளி முதல்வர் கவுசல்யா ராஜன் ஆகியோர் பாராட்டினர்.