உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்தல்கள் எதிர்கொள்ள பா.ஜ., ஆலோசனை

தேர்தல்கள் எதிர்கொள்ள பா.ஜ., ஆலோசனை

திருப்பூர்:திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுக்கு தேர்தலையொட்டி நன்றி தெரிவிப்பு கூட்டம் நடந்தது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நேற்று திருப்பூரில் நடந்தது. திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டசபைக்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில பொது செயலாளர் முருகானந்தம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் மலர்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றன்ர. அதில், தேர்தலில் களப்பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகள் பேசினர்.---திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேசினார். அருகில், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உள்ளிட்டோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை