உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருப்பூர்;வரும், 11ம் தேதி திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் மாநில அளவிலான பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம், வாவிபாளையத்திலுள்ள கிருஷ்ணா மஹாலில் நடைபெறுகிறது.மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் அந்த கூட்டத்தில், தமிழம் முழுவதும் இருந்து முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில், பா.ஜ.., அலுவலகத்தில் நடைபெற்து. மாநில செயலாளர் மலர்க்கொடி, செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன், பாலசுப்ரமணி,, மாவட்ட பொருளாளர் நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ