அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்
உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், கல்லுாரி முதல்வர் கல்யாணி ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கலைசெல்வி தலைமை வகித்தார்.மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ரவி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக உடுமலை கிளைச்செயலாளர் பேராசிரியர் வேலுமணி ரத்தம் வழங்கி, முகாமை வழிநடத்தினார்.தொடர்ந்து பேராசிரியர்கள், மாணவர்கள் 55 பேரிடமிருந்து 55 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் ரத்தம் சேகரித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கன்னிமுத்து, மாணவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.