உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம் மலைவாழ் மக்களின் துயரம் என்று தீருமோ? மழைவாழ் மக்களின் துயரம் என்று தான் தீருமோ?

மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம் மலைவாழ் மக்களின் துயரம் என்று தீருமோ? மழைவாழ் மக்களின் துயரம் என்று தான் தீருமோ?

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 6,500 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இருந்து, மூன்று நாட்களில், மூன்று பேரை மருத்துவ சிகிச்சைக்காக, தொட்டில் கட்டி, கரடுமுரடான மலைப்பாதைகளில் துாக்கி வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.கடந்த, 29ம் தேதி, தைலப்புல் சேகரிக்க சென்றபோது, யானை தாக்கி படுகாயமடைந்த குருமலையைச் சேர்ந்த வெங்கிட்டான், 46. நேற்று முன்தினம், மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஈசல்திட்டு குடியிருப்பை சேர்ந்த சடையன் மனைவி பாப்பாள், 35, நேற்று மலைச்சரிவில் விழுந்து காயமடைந்த குருமலையை சேர்ந்த பச்சையப்பன், 45, ஆகிய மூவரையும், தொட்டில் கட்டி, 7 கி.மீ., துாரம் துாக்கி வந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மலைவாழ் மக்கள் கூறியதாவது:திருமூர்த்திமலை முதல் குருமலை வரை ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. வனச்சூழல் பாதிக்காத வகையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வழித்தடத்தில் அமைக்கப்படும் இச்சாலையால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதே போல், ஈசல் திட்டு குடியிருப்புக்கும் ரோடு அமைக்க அளவீடு செய்யப்பட்டது. அரசு நிதி ஒதுக்கினாலும், வனத்துறையினர் தடுப்பதால் சிக்கல் நீடிக்கிறது. ரோடு வசதியில்லாததால், அவசர மருத்துவ வசதி மட்டுமன்றி, கல்வி, குடிநீர், ரேஷன் என, எந்த அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை.உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், கர்ப்பிணியர், குழந்தைகள், வன விலங்குகளால் தாக்கப்பட்டு காயமடைவோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதற்கு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
செப் 02, 2024 07:42

வாணாண்டா.. அங்கேயெல்லாம் ஆஸ்பத்திரி, வீடு கடி இன்னொரு வயநாடா மாத்தாதீங்க. அவிங்களை அடிவாரத்துக்கு மாத்தி குடி வையுங்க.


lana
செப் 01, 2024 14:15

அது தான் கார் பந்தயம் நடத்த road போட்ட விட்டது. உங்களுக்கு சாலை வசதிகள் எதற்காக. டாஸ்மாக் இல்லை என்றால் மட்டும் தான் இந்த மாதிரி அரசு நடவடிக்கை எடுக்கும்


புதிய வீடியோ