உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருமேகம் கவர்ந்திழுக்கும் கானகம் கரையலாமா!

கருமேகம் கவர்ந்திழுக்கும் கானகம் கரையலாமா!

''திருப்பூர் போன்ற இடங்களில் வசிக்கும் மக்களுக்கு, மழைக்காடுகள் நிரம்பிய மலை மாவட்டங்கள், சுற்றுலா தலங்களாக தான் கண்ணுக்கு தெரிகின்றன. ஆனால், மழைக்காடுகள் தான், மாநிலம் முழுமைக்குமான நீர் ஆதாரம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்'' என்று கூறுகிறார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ.அவர் கூறியதாவது: புவி வெப்பம் காரணமாக, உலகில் ஒட்டுமொத்த மக்களின் கவனமும், மரம் நடுதல் மற்றும் காடுகளை வளர்த்தல் போன்ற சிந்தனைகளில் மூழ்க துவங்கியிருக்கிறது. உலகில் உள்ள மொத்த காடுகள், 53 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், மழைக்காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய காடுகளில் உள்ள மரங்கள், 20 முதல், 30 மீ., உயரத்துக்கு வளர்ந்து, நிழல் பரப்பி, அப்பகுதியை இருள் சூழ்ந்த பகுதியாக மாற்றும்.இவ்வகை காடுகள் தான், மழை மேகத்தில் இருந்து மழைநீரை பிரித்தெடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. இந்தப் பசுமை மாறாக காடுகள், ஆண்டுக்கு, 3,000 மி.மீ., மழையை கொடுக்கும். அதில், 75 சதவீதம் நீர், பூமி பரப்பில் உள்ள 'ஸ்பான்ச்' போன்ற பகுதியில் தேங்கும். வானில் இருந்து விழும் மழைநீர் நேரடியாக மண்ணில் விழாமல், மரங்களின் மேல் பட்டு மண்ணில் விழுவதால் மண்ணரிப்பும் தடுக்கப்படுகிறது.

புவி வெப்பம் குறைக்கும் காடுகள்

கார்பன் டை ஆக்ஸைடை உட்கிரகித்துக் கொள்வதில், இவ்வகை காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஒவ்வொரு எக்டர் பரப்பளவிலும், 17 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை உட்கிரகித்து, 2.5 மில்லியன் டன் ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. அவ்வகையில் புவி வெப்பத்தை குறைப்பதில் இவ்வகை காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோலைக்காடுகளும், புல்வெளிகளும் மழைக்காடுகள் உள்ள இடமாக இருக்கிறது. அங்கு உற்பத்தியாகும் நீர், காவிரி ஆற்று நீரில், ஆறில் ஒரு பகுதி. காவிரியில் நீரோடினால் தான் தஞ்சையில் நெல் விளையும். பவானி ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம் தான் கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் தாகம் தணிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, மழை தரும் மலை மாவட்டத்தின் முக்கியத்துவத்தை மாநிலம் முழுக்க உள்ள மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.- இன்று (ஜூன் 22) உலக மழைக்காடுகள் தினம்

காத்து, உலகை மேம்படுத்துதல்' என்பதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி