உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1.71 கோடியில் வகுப்பறைகள் காணொலியில் முதல்வர் திறப்பு

ரூ.1.71 கோடியில் வகுப்பறைகள் காணொலியில் முதல்வர் திறப்பு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 47வது வார்டு விஜயாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்தது. அதனையேற்று, கடந்த 2022-23 நிதியாண்டின் நபார்டு வங்கி திட்டத்தில், 1.71 கோடி ரூபாயில் எட்டு புதிய வகுப்பறை கட்டப்பட்டு, இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.நேற்று கடலுாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் புதிய வகுப்பறைகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை