உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீரா பானத்தை தவிர்க்கும் தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தில் கவலை

நீரா பானத்தை தவிர்க்கும் தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தில் கவலை

பல்லடம்;விவசாயிகளுக்கு நான்கு மடங்கு லாபம் அளிக்கும், 'நீரா' பானத்தை தமிழக அரசு தவிர்த்து வருவதாக, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம், பல்லடம் வனாலயம் அடிகளார் அரங்கில் நடந்தது. வனம் அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். கே.வி.கே., சார்பில் அதன் தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சிகள் ஆலோசனைகள் வழங்கினார்.உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:இயற்கை விவசாயத்துக்கு மாறாமல், மனிதனை மண்ணோடு மண்ணாகும் செயலைத்தான் செய்து வருகிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது முன்னோர்கள், சித்தர்கள் கூறிச்சென்றது தான் நீரா பானம். சர்வரோக நிவாரணியாக உள்ள இந்த பானத்தை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தயாரித்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.விவசாயிகளும், ஒரு வகையில், தங்களது நிலத்துக்குள் தொழிற்சாலைகளை நிறுவியது போன்ற கட்டமைப்பே நீரா பானம். பல ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாததே, நீரா போன்ற இயற்கை பானங்கள் மக்கள் மத்தியில் சென்று சேராததற்கு காரணம்.டாஸ்மாக் மூலம் வருவாய் பார்க்கும் அரசுகள், நீரா பானத்தை முன்னிலைப்படுத்த மறுக்கின்றன. ஆண்டுதோறும் டாஸ்மாக் வருவாயை பெருக்கியதாக பெருமை பேசிக்கொள்வதால் என்ன பயன்? நீரா பானம் விவசாயிகளுக்கு நான்கு மடங்கு லாபம் தரக்கூடியது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, தென்னை விவசாயத்தில் நோய் பூச்சி மேலாண்மை, டிராக்டர் தொழிலில் புதுமை, டிராக்டர் மேலாண்மை உள்ளிட்டவை குறித்தும், மத்திய அரசு சார்ந்த வேளாண் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. வனம் அமைப்பு நிர்வாகிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை