உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினசரி மார்க்கெட் வளாகம் இறுதிக்கட்டத்தில் பணிகள்

தினசரி மார்க்கெட் வளாகம் இறுதிக்கட்டத்தில் பணிகள்

திருப்பூர் : திருப்பூர், காமராஜ் ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 30 கோடி ரூபாய் மதிப்பில், தினசரி மார்க்கெட் வளாகம் கட்டு மானப்பணி நடக்கிறது. பெருமளவு கட்டு மானப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பணி நிலவரத்தை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து ஒப்படைக்குமாறு, அறிவுறுத்தப்பட்டது.

நமக்கு நாமே திட்டம்

மாநகராட்சி 8வது வார்டு மும்மூர்த்தி நகரில் 'நமக்கு நாமே' திட்டத்தில், வடிகால் கட்டும் பணி நடக்கிறது. அப்பகுதியில் தற்போது வடிகால் வசதி இல்லாத குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும் கமிஷனர் ஆய்வு செய்தார். சக்தி நகர், குருவாயூரப்பன் நகர் ஆகிய பகுதிகளில் சிறப்புநிதியில் புது ரோடு அமைக்கப்பட்டுள்ளது. தோட்டத்துப்பாளையம் பகுதியில் மாநில நிதிக்குழு திட்டத்தில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இப்பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ