உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்மார்ட் வகுப்பறைக்கு இணைய வசதி இணைப்பு வழங்குவதில் தாமதம்

ஸ்மார்ட் வகுப்பறைக்கு இணைய வசதி இணைப்பு வழங்குவதில் தாமதம்

உடுமலை:ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பதற்கான இணையதள வசதி பெறுவதில், உடுமலை சுற்றுப்பகுதியில், 70 சதவீத பள்ளிகளில் தாமதமாகிறது.புதிய கல்வியாண்டு முதல், அரசு துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே, இணையதள வசதி வழங்கப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஒரு சில துவக்கப்பள்ளிகளில் மட்டுமே, இணையதள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன.அனைத்து துவக்கப்பள்ளிகளுக்கும் இந்த வசதி வழங்கப்பட உள்ளதால், பள்ளி தரப்பில் மட்டுமின்றி பெற்றோரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு முழு ஆண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், உடுமலை சுற்றுப்பகுதியில், 70 சதவீத பள்ளிகளில் இணைதள வசதி பெறுவதில், தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு, ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சமாக மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் இணையதள வசதியில் தாமதப்படுத்துவதால், தொடர்ந்து அனைத்து பணிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.பல்வேறு நடைமுறை சிக்கல்களை காரணமாக வைத்து, கிராமப்புற பள்ளிகளில் இணைய இணைப்பு வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது.தொலைதொடர்பு நிறுவனங்களை கல்வித்துறை நேரடியாக அணுகி, இப்பிரச்னையை சரிசெய்ய வேண்டுமென, பள்ளி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ