உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் பொருள் வினியோகம் முறையாக வழங்க ஆர்ப்பாட்டம்

ரேஷன் பொருள் வினியோகம் முறையாக வழங்க ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் முறையாக வழங்க வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அவ்வகையில், திருப்பூர் தெற்கு மாநகர சங்கம் சார்பில், ராயபுரம் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு நகர தலைவர் மினி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் விஜயம்மா, நகர செயலாளர் பானுமதி, மாவட்ட துணை தலைவர் சாவித்திரி முன்னிலை வகித்தனர்.l ஊத்துக்குளி டவுன் ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா துணை தலைவர் மீராலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி