உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை அள்ளாமல் சிரமம்... குடிநீர் கிடைக்காமல் அவதி

குப்பை அள்ளாமல் சிரமம்... குடிநீர் கிடைக்காமல் அவதி

குப்பையால் சிரமம்திருப்பூர், நெசவாளர் காலனி, ஜவகர் நகர், 3வது வீதியில் குப்பை அகற்றப்படாமல் ரோட்டில் கொட்டி வைத்துள்ளனர். பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.- ராஜன், நெசவாளர் காலனி.அதிகாரிகள் மவுனம்திருப்பூர், பெரிச்சிபாளையம், வினோபா நகரில் பிரதான தண்ணீர் குழாயும், பாதாள சாக்கடை குழாயும் ஒன்றாக இருக்கிறது. இதனால், பாதிப்பு ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருப்புசாமி, பி.கே.ஆர்., லே அவுட்.குடிநீருக்கு அவதிதிருப்பூர், முதலிபாளையம், லட்சுமி நகர், அங்காளம்மன் நகர் ஆகிய பகுதிகளில், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.- அர்ஜூனன், முதலிபாளையம்.அவல நிலையில் கழிப்பிடம்பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பொது கழிப்பிடம் பாதுகாப்பற்ற நிலையில், சுகாதாரம் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது.- மணி, பல்லடம்.வீணாகி வரும் குடிநீர்திருப்பூர், நடராஜ் தியேட்டர் ரோட்டரி மண்டபம் எதிரில், ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து, கடந்த, இரு நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.- ரவிசந்திரன், திருப்பூர்.ரியாக் ஷன்நடைமேடை சீரமைப்புதிருப்பூர், புஷ்பா மேம்பாலத்தில் உள்ள குமரன் காம்ப்ளக்ஸில் நடைபாதை சேதமடைந்து இருந்தது. இது குறித்து 'தினமலர்' செய்தியால், சரி செய்யப்பட்டது.- குணசேகரன், திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி