| ADDED : ஜூலை 16, 2024 02:29 AM
பல்லடம்'திருப்பூர் மாவட்ட விதை மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், பல்லடம் அருகே, தெற்குபாளையம் சமுதாய நலக் கூடத்தில் நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மோகன்ராஜ், பொதுச் செயலாளர் அண்ணாமலை, துணை பொது செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 'காங்கயம் மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் புதிய நிர்வாகிகள் நியமித்தல். டிச., 3 இயக்கத்தின் அனுமதியுடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். அரசு சேவைகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான, 2016 உரிமை சட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். சங்க நிர்வாகிகள் எந்தவித சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.