உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல் பருவ பாட புத்தகங்கள்; பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பு

முதல் பருவ பாட புத்தகங்கள்; பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பு

திருப்பூர்:கல்வியாண்டுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள், பள்ளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அடுத்த மாதம், 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, ஏற்கனவே, ஒவ்வொரு வட்டாரத்திலும், குறிப்பிட்ட பள்ளிகளை மையமாகக் கொண்டு, கல்வித்துறை அலுவலகத்திலிருந்து புத்தகங்கள் தருவிக்கப்பட்டன. தற்போது, வாகனங்கள் வாயிலாக, நேரடியாக பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வரும் ஜன., 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அப்போது, மாணவ, மாணவியருக்கு முதல் பருவ புத்த கங்கள் வழங்கப்படும். அதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை