உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி மற்றும் அவிநாசி செல்லும் நெடுஞ்சாலைகள் இணையும் நால்ரோடு சிக்னல், வாகன போக்குவரத்து நிறைந்த பகுதி. பொள்ளாச்சி ரோட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வந்ததால், குறுகலாக இருந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய தரைமட்ட பாலம் கூடுதல் அகலத்துடன் கட்டப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையுடன் பொள்ளாச்சி ரோடு சந்திக்கும் இடத்தில் இருந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. இப்பணிகள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும், பழைய மின்கம்பம் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.---அகற்றப்படாத மின் கம்பம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி