மேலும் செய்திகள்
தி.மு.க., நகர செயலாளராக போட்டா போட்டி
19-Feb-2025
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., பொறுப்பாளராக தங்கராஜ், நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து திருப்பூர் வந்த அவருக்கு நேற்று காலை அனுப்பர்பாளையத்தில், தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து கட்சியினர் வரவேற்றனர். தங்கராஜ், மாநகராட்சி முதலாம் மண்டல வளாகத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், தெற்கு மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ராஜூ, மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வரவேற்பில் கட்சியினர் அதிகளவில் திரண்டனர்.
19-Feb-2025