உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை விபத்தில் டாக்டர் பலி

சாலை விபத்தில் டாக்டர் பலி

அனுப்பர்பாளையம்:திருப்பூர், காந்தி நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரின் மகன் கவுதம், 30. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.கடந்த, 29ம் தேதி பைக்கில் நண்பரை பார்க்க கோவை சென்றுவிட்டு, திருப்பூர் திரும்பி கொண்டிருந்தார். ஈட்டிவீரம்பாளையம் மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென்று நிறுத்தப்பட்ட வேன் மீது, பைக் மோதியது. இதில், படுகாயம் அடைந்த கவுதம், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ