உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ட்ரீம் சீரீஸ் மாருதி புதிய எடிசன் ஸ்ரீசஷ்டி கார்ஸ்-ல் அறிமுகம்

ட்ரீம் சீரீஸ் மாருதி புதிய எடிசன் ஸ்ரீசஷ்டி கார்ஸ்-ல் அறிமுகம்

திருப்பூர்;'மாருதி சுசூகி' நிறுவனம், 'ட்ரீம் சீரீஸ்' எனும் 'ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன்' மாடல்களை புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஆல்டோ கே10, எஸ் - பிரஸ்ஸோ, செலிரியோ' ஆகிய கார்களில், ட்ரீம் சீரீஸ் எனும் புதிய எடிஷனை மாருதி அறிமுகப்படுத்தி உள்ளது.ஸ்ரீ சஷ்டி கார்ஸ் பொது மேலாளர் ரஞ்சித்குமார் கூறியதாவது:இந்த ஸ்பெஷல் எடிஷன், வாகனங்களின் மாடலை பொருத்து, சில கூடுதல் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகளுடன் வருகின்றன. அந்த வகையில், ஆல்டோ கே10 காரில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, செக்யூரிட்டி சிஸ்டம்; எஸ் - பிரஸ்ஸோவில் ஸ்பீக்கர், குரோம் கார்னிஷ்; செலிரியோவில், பயோனீர் மல்டிமீடியா ஸ்டீரியோ போன்ற மேம்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த எடிஷன் மாடல்கள், இம்மாதம் மட்டும் விற்பனைக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவு நிலை பிரிவில் உள்ள இந்த கார்களை, மக்கள் எளிதாக வாங்கும் வகையில், ஆல்டோ கே 10 வி.எக்ஸ்.ஐ., பிளஸ், எஸ் - பிரஸ்ஸோவி. எக்ஸ்.ஐ., பிளஸ், மற்றும் செலிரியோ எல்.எக்ஸ்.ஐ., ஆகியவற்றின் விலையை 4.99 லட்சம் ரூபாயாக நிறுவனம் நிர்ணயித்துள்ளது.இதுபோக, ஏ.ஜி.எஸ்., எனப்படும் 'ஆட்டோ கியர் ஷிப்ட்' வகையை சேர்ந்த பல்வேறு மாடல்களுக்கான விலையையும், 5,000 ரூபாய் வரை மாருதி குறைத்துள்ளது.மேலும் விபரங்களுக்கு 99429 02548, 99429 06054.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை