உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தையை தாக்கிய போதை தந்தை கைது

குழந்தையை தாக்கிய போதை தந்தை கைது

பல்லடம் : குழந்தையைத் தாக்கிய 'போதை' தந்தை கைது செய்யப்பட்டார்.பல்லடம் அருகே பச்சாபாளையம், அய்யர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 45; தனியார் நிறுவன செக்யூரிட்டி. மனைவி சரோஜினி 38. இவர்களுக்கு இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. குடிபோதையில் இருந்த மணிகண்டன், குழந்தையை தாக்கியுள்ளார். இதில், குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.சரோஜினி அளித்த புகாரின் பேரில், மணிகண்டனை கைது செய்த பல்லடம் போலீசார், நீதிபதி உத்தரவின் பேரில் பல்லடம் கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ