உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காரை விரட்டி பிடித்த டி.எஸ்.பி., 450 கிலோ குட்கா பறிமுதல்

காரை விரட்டி பிடித்த டி.எஸ்.பி., 450 கிலோ குட்கா பறிமுதல்

திருப்பூர்:பெங்களூரில் இருந்து பழநிக்கு காரில் கடத்தி செல்லப்பட்ட, 450 கிலோ குட்காவை, டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார், காரில் விரட்டிச்சென்று பிடித்தனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம், தாராபுரம் ரோட்டில் மதுக்கடை முன்பு சந்தேகப்படும் விதமாக கார் நிற்பதாக டி.எஸ்.பி., பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து செல்வதற்குள், மது அருந்தி விட்டு வந்த நபர் காரை எடுத்து கொண்டு தாராபுரம் நோக்கி புறப்பட்டார். போலீசார் அவரை வாகனத்தில் பின்தொடர்ந்தனர். சின்னியகவுண்டம்பாளையம் அருகே மடக்கி பிடித்தனர். காரில் வந்தவர் வேலுார், கங்கையம்மன் கோவிலை சேர்ந்த அருள், 25; பெங்களூரில் தங்கியுள்ளார்; காரில் 450 கிலோ குட்கா இருந்ததும், பழநிக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 450 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை