உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

உடுமலை : மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.புதிய ஒப்பந்தம், தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், வாரியத்தின் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை உடனடியாக தர வேண்டும்.ஊதிய உயர்வு, குடும்பநல நிதி, மின் விபத்தில் உயிரிழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூபாய் பத்து லட்சம் வழங்க வேண்டும், உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.திட்டத்துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். தலைவர் ஜெகானந்தா, செயலாளர் கோவிந்தன்,பொருளாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்